Posts

Showing posts from June, 2026

TAMIL OV RE-EDITED BIBLE (தமிழ் ஓ.வி டீரி எடிடட் பைபிள்)

திருத்தியமைக்கப்பட்ட தமிழ் வேதாகமம் (Re-edited Tamil Bible) நாம் அனுதினமும் பயன்படுத்தி வரும் தமிழ் பரிசுத்த வேதாகமத்தின் பரவலாகப் பயன்படுத்தப்படும் பதிப்பு 1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Bower Revision (ஹென்ரி பவர் திருத்தம்) ஆகும். இது "ஐக்கிய சங்க மொழிபெயர்ப்பு" (United Bible Societies Version) என்றும் அழைக்கப்படுகிறது.  சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வேதாகம சங்கம் (Bible Society of India - BSI), மூல எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளுடன் ஒப்பிட்டு, தற்காலத் தமிழ் மொழிநடைக்கு ஏற்ப வேதாகமத்தின் அடிப்படை அர்த்தத்தை மாற்றாமல் "திருத்தியமைக்கப்பட்ட தமிழ் வேதாகமம்" (Re-edited Tamil Bible) என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் 11 முக்கிய அம்சங்கள் 1. குறுந்தலைப்புகள் (Section Headings) ஒவ்வொரு பகுதிக்கும் பொருத்தமான குறுந்தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, லூக்கா 8-ஆம் அதிகாரத்தில் "இயேசு கிறிஸ்துவோடு இருந்தவர்கள்", "விதைக்கிறவனைப் பற்றிய உவமை" போன்ற தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனால் அதிகாரத்தின் உள்ளடக்கத்தை எளிதில் புரிந்துக...